வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்

வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லை, இதனால் இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகளது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.என தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. கே.எஸ்.குகதாசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் விரிவாக்கமானது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நம்பிக்கைக்குரிய ஒரு படியாகும். பொருளாதார மாற்றச் சட்டத் திருத்தம், அரச-தனியார் கூட்டுச் சட்ட அறிமுகம் முதலியன வணிக நம்பிக்கை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனினும், இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது எந்தக் குறிப்பிட்ட தொழில்கள் பயனடையும் என்பது பற்றிய தெளிவான வரைபடத்தை அரசு வழங்கவில்லை என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form