தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

 


2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. 

தேர்தல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) பிற்பகல் 3.00 மணி முதல் மார்ச் 28 ஆம் திகதி இரவு 10:00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர் நேரில் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form