அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் சஜித் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (26) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், இலங்கைக்கான அவுஸ்திரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி லலிதா கபூர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் மேத்யூ லார்ட் ஆகியோர் பங்கேற்றனர்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நாட்டில் நிலவும் பல்வேறு சமூக-பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இங்கு நீண்டநேரம் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்தும், கிட்டிய காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உயர்ஸ்தானிகருக்கு இதன்போது தெளிவூட்டினார்.

தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form