யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி

 

யாழ். போதனா வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

வைத்தியசாலை நிர்வாகத்திடம பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அவசர சிகிச்சைகள் தவிரந்த ஏனைய சிகிச்சைகளை வைத்திய அதிகாரிகள் இடைநிறுத்தி உள்ளதால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியிருந்தனர். 

வைத்தியர்கள் சங்கத்தின் இப் போராட்டத்தினால் வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் பலவும் இயங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியாமல் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். 

இதேவேளை, வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் நோயாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form