விஜய்யின் மகளிர் தின வாழ்த்து

 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

 

எல்லோருக்கும் வணக்கம்.

 

இன்றைக்கு மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று உங்கள் அத்தனை பேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. எங்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

 

சந்தோஷம் தானே. பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது insecurity-ஆ இருக்கும்போது எந்த சந்தோஷமும் இருக்காது தானே. அப்படி என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியுது.

 

நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தான் தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே.

 

2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம்.

 

ஒண்ணு மட்டும் சொல்கிறேன். எல்லா சூழ்நிலையிலும் உங்கள் மகனா, அண்ணா, தம்பியா, தோழனா உங்களோடு நான் நிற்பேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 


https://x.com/TVKVijayHQ/status/1898221815329161340

Post a Comment

Previous Post Next Post

Contact Form