சீனப் பல்கலைக் கழகங்களுக்குத் தடை விதித்த தாய்வான்!

 

சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக,  தாய்வான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக் கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  எனவே குறித்த பல்கலைக்கழகங்களுடன்  தாய்வானில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது”  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form