நுகர்வுக்கு பொருத்தமற்ற பாரியளவான கோதுமை மா சிக்கியது


 சந்தைக்கு விநியோகிப்பதற்காக வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் களஞ்சியசாலை ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த கோதுமை மா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் இருந்த, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 750 தொன் கோதுமை மா இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மாவு தொகையின் உற்பத்தி திகதிகள் கடந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களாகவும், காலாவதி திகதிகள் இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அவை வண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

அதன்படி, குறித்த பொருட்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளின் பொறுப்பில் எடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post

Contact Form