தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரவே சாமானிய மக்களுக்கு நகை என்பது எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.
இனி தங்கம் விலை 60,000 ரூபாவிற்கும் கீழ் குறையவே குறையாது என்ற நிலைக்கு வந்துவிட்டது. வரலாற்றிலேயே முதன்முறையாக பிப் 11 ஆம் திகதி தங்கம் விலை சவரனுக்கு ரூபா 64,000 ரூபாவை தாண்டியது.
நேற்று (07) தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபா குறைந்து, ஒரு கிராம் ரூ.8,030 ரூபாவிற்கும், சவரனுக்கு 240 ரூபாவிற்கும் குறைந்து, ஒரு சவரன் 64,240 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (08) தங்கம் விலை கிராமுக்கு ரூபா 10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,040 ரூபாவிற்கும், சவரனுக்கு 80 ரூபா உயர்ந்து, ஒரு சவரன் 64,320 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 30 ரூபா உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,630 ரூபாவிற்கும், சவரனுக்கு 240 ரூபா உயர்ந்து ஒரு சவரன் 53,040 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாவிற்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.