திருகோணமலை - அம்பேபுஸ்ஸ வீதியில் திருகோணமலை திசையிலிருந்து ஆண்டான்குளம் திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், பாதசாரிகள் கடவையில் வீதியை கடந்த பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பாதசாரி பலத்த காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஆண்டான்குளத்தைச் சேர்ந்த 56 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக 19 வயது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags
Sri Lanka