ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்



 இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 


இந்தத் தாக்குதல்களை அவர்கள் "எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்" (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர். 

ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி, கூட்டங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 

அமெரிக்கா, இந்தத் தாக்குதலுக்கு எந்தவித ஆதரவோ அல்லது உதவியோ வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், ஈரானின் டெஹ்ரான் உட்பட பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Post a Comment

Previous Post Next Post

Contact Form