தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு கடந்த வாரம் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். பலரும் அவருக்கு ஆறுதல் கூறியிருந்த நிலையில், தனது காதல் கணவரை பார்க்க பிரியங்கா வீல் சேரில் இலங்கை சென்றுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தொகுப்பாளினி பிரியங்காவிற்கு வசி என்பவருடன் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இது இரண்டாவது திருமணம் என்பதால், மிகவும் எளிமையாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்த கொண்டனர். பிரியங்காவின் கணவர் பெயர் வசி, இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன் ஆவார். ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை வசி நிர்வகித்து வருகிறார். இதற்கான நிகழ்ச்சிகளை நடத்திய போது, சின்னத்திரை நட்சத்திரங்களை இலங்கைக்கு அழைத்த போது, பிரியங்கா தேஷ்பாண்டிற்கும் வசியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது. அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
காலில் எலும்பு முறிவு: திருமணத்திற்கு பின் பிரியங்கா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மாட்டார் பிரேக் எடுத்துக்கொள்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால், திருமணத்திற்கு பின், பிரியங்கா ஊ சொல்றியா நிகழ்ச்சி மற்றும் ஸ்டார் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக இலங்கையில் இருந்து இந்தியா வந்திருந்த அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, காலில் எலும்பு முறிவு என பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த இணையவாசிகள், திருமணமான கொஞ்ச நாளிலேயே இப்படியா என கேட்டுவந்தனர்.
தற்போது, பிரியங்கா, காலில் எலும்பு முறிவு இருந்தாலும், பரவில்லை. கணவரை பார்த்தே ஆக வேண்டும் என, வீல் சேர் மூலமாக இலங்கைக்கு சென்றுள்ளார். தனது மனைவி வீல் சேரில் வருவதைப் பார்த்த வசி, ஜெயிலர் படத்தில் 'சூப்பர் ஸ்டாருடா' பாட்டை போட்டு அலறப்பறை செய்துள்ளார். மேலும், வந்துட்டாப்ல... வந்துட்டாப்ல என்ற கேப்ஷனை போட்டு பிரியங்காவை குஷிப்படுத்தி உள்ளார். இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
Tags
Cinema