நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான மனுவின் பரிசீலனைத் திகதி அறிவிப்பு

 

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறியதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒக்டோபர் 14ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

சமூக மற்றும் மத மையத்தின் பணிப்பாளர் பாதிரியார் ரொஹான் சில்வா மற்றும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுராஜ் நிலங்க ஆகியோர் தாக்கல் செய்தனர். 

அதற்கமைய, குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே, மேல்முறையீட்டு நீதிமன்றம் அதன் பரிசீலனைத் திகதியை அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form