நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்தனர்.
பெல்மடுல்ல - நோனாகம வீதியின் கொஸ்வெடிய பிரதேசத்தில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் அல்பிடிய, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்நிலையில், ஶ்ரீபுர - சிங்கபுர வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின் இருக்கையில் பயணித்தவரும் ஶ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது ஓட்டுநர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
சம்பவத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே உயிரிழந்ததாகவும், காயமடைந்த நபர் 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கண்டி - அப்லன்ட் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 64 வயதுடைய அங்கும்புர பகுதியைச் சேர்ந்த ஒருவரே மரணித்துள்ளார்.
Tags
Sri Lanka