தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் நேற்று (19) இரவு, குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில், 35 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேவாலேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் பட்டுவத்த, ஹெலமட பகுதியைச் சேர்ந்தவராவார்.
பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டதால் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உடல் மீதான நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தேவாலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Sri Lanka