பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்திய இந்தியா!

 

ஆசிய கிண்ண தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Shivam Dube 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

பின்னர் 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Abhishek Sharma அதிகபட்சமாக 74 ஓட்டங்களையும், Shubman Gill 47 ஓட்டங்களையும் Tilak Varma ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Haris Rauf 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

Post a Comment

Previous Post Next Post

Contact Form