ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளியை மீறியதை அடுத்து, எஸ்டோனியா மற்ற நேட்டோ உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தக் கோரியுள்ளது.
பின்லாந்து வளைகுடாவின் மேல் மூன்று ரஷ்ய மிக்-31 போர் விமானங்கள் எஸ்டோனியா வான்வெளியில் "அனுமதியின்றி நுழைந்து மொத்தம் 12 நிமிடங்கள் அங்கேயே இருந்ததாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் பணியின் கீழ் இத்தாலி, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் விமானங்கள் குறித்த விமானங்களை துரத்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது "ரஷ்ய பொறுப்பற்ற நடத்தைக்கும் நேட்டோவின் பதிலளிக்கும் திறனுக்கும் மற்றொரு எடுத்துக்காட்டு" என்று நேட்டோ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் எஸ்டோனியா வான்வெளியில் அத்துமீறி பறந்ததாக வௌியான தகவலை ரஷ்யா மறுத்துள்ளது.
ஆனால், சமீபத்தில் போலந்து மற்றும் ருமேனியா ஆகிய இரண்டு நேட்டோ உறுப்பினர்களும் ரஷ்ய ட்ரோன்கள் தங்கள் வான்வெளியை மீறியதாகக் கூறியதைத் தொடர்ந்து, பதற்றம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags
World