சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிக்காத பிரபலங்கள்!

 

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் பட்டியலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், 29 முன்னாள் தூதுவர்கள் மற்றும் இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்குவர். 

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத முன்னாள் அமைச்சர், முன்னாள் மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். 

முன்னாள் ஆளுநர்களான மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க மற்றும் வில்லியம் கமகே ஆகியோர் குறித்த திகதிக்குள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை. 

அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான லோஹான் ரத்வத்தே, தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form