ஶ்ரீ கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தெரிவுக்குழுத் தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஹேமந்த விக்ரமரத்ன, வினோதன் ஜோன், இந்திக டி சேரம் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளமையினாலேயே பிரமோத்ய விக்ரமசிங்கவை மீண்டும் தெரிவுக்குழுத் தலைவராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags
Sports
