எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான Takafumi Kadonoக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இவ்வாறு Takafumi Kadonவைச் சந்தித்தார்.
நாடு வங்குரோத்து நிலையைச் சந்தித்த வேளை, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியான்மைகள் மற்றும் தொழில்முனைவோரை தொழில் ரீதியாக கட்டியெழுப்புவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர் தொகையை நன்கொடையாகப் பெற்றுத் தந்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது Takafumi Kadonoக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அவ்வாறே, தற்போதைய பேரிடர் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்நாட்டுப் பிரதிநிதியான Takafumi Kadonoக்கு எடுத்துரைத்ததோடு, இந்த இக்கட்டான நேரத்தில் ஒரு நாடாக நாம் மீண்டும் எழுந்து நிற்பதற்குத் தேவையான ஆதரவுகளைப் பெற்றுத் தருமாறும் அவர் கௌரவமாகக் கேட்டுக் கொண்டார்.
Tags
Sri Lanka
