பமுணுகம, சேதவத்த பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர் பமுணுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கம்புருகமுவ, ஊதுடல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனது மூத்த சகோதரருடன் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு முற்றியதன் காரணமாக, அவராலேயே இந்தக்கொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பமுணுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Sri Lanka
