அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை

 


விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். 

மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறுகிறார். 

கடந்த வியாழக்கிழமை இரவு பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வல செலுத்திச் சென்ற ஜீப் வண்டி, மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் காரில் பயணித்த சிறு குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர். 

எவ்வாறாயினும், விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வல கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form