சிட்னியின் பொண்டி கடற்கரையில் (Bondi Beach) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் 10 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
சிட்னியின் பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்களைக் கண்டறிய நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் வெற்றி கண்டுள்ளனர்.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என்பது தெரியவந்துள்ளது.
அங்கு ஒரு துப்பாக்கிதாரி உயிரிழந்ததுடன், இவ்வாறு உயிரிழந்தவர் 50 வயதுடைய தந்தை எனவும், மகனான 24 வயது இளைஞர் தற்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச் சூடு யூதர்களின் கொண்டாட்ட நிகழ்வொன்றின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இச்சம்பவத்தில் 29-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
Tags
World
