டித்வா புயலுக்கு பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் Rebuilding Sri Lanka நியத்திற்கு இதுவரை 3,421 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிக பெறுமதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை 40 நாடுகளிடமிருந்து இந்த நிதியத்திற்கு நிதியுதவி கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வௌிநாட்டு நாணயங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியானது 4.17 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
இதில் அதிகளவான பங்களிப்பு அமெரிக்காவிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அடுத்ததாக அவுஸ்திரேலியாவில் இருந்தும், இங்கிலாந்தில் இருந்தும் ஜேர்மனியில் இருந்தும் குறித்த நிதியத்திற்கு அதிகளவில் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags
Sri Lanka
