இன்றும் நாடு முழுவதும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு

இன்று 11.02.2025 இலங்கை நாடு முழுவதும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இன்று மாலை 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மேலும், பாவனையாளர்கள் தங்களின் கணக்கு எண்ணை 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்புவதன் மூலமும் மின்வெட்டு நேரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்று இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது . இதற்கிடையில், நேற்று 10.02.2025 நாடு முழுவதும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டது குறிப்பிட தக்கது. இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரும், களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் நிலையத்தின் தலைமை பொறியியலாளருமான தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். இருப்பினும், குறித்த மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை மின்சார விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form