காண்டபிளின் சேவை துப்பாக்கி காணாமல் போன வழக்கில் அவரது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன வழக்கு தொடர்பில் அவரது தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெற்றோரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை சேஜை கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். இதே வழக்கில் , சந்தேக நபருக்கு உதவியாக இருந்ததாக நம்பப்படும் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின் முடிவில் , குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் டுபாய்க்கு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரு பெற்றோரும் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக அறியப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form