இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவால் பீங்கானால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் ஒருவர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று 11.02.2025 இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, ஒருவரை பீங்கானால் தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இருப்பினும், எமது செய்தி சேவை விசாரித்தபோது, பாராளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு முன்னர் சம்பவ இடத்தில் நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோவை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
source: tamil.adaderana.lk
Tags
Sri Lanka