மின்வெட்டு குறித்து முதலில் ஒரு குரங்கின் மீது பழி சுமத்திய இலங்கை அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இடுவதன் மூலம் இவ்வாறு கூறியுள்ளார்.
அவரை மேலும் தற்போதைய அரசாங்கம் உண்மையான மின்தடைக்கான காரணம் என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவை காலங்களை நிர்வகிக்காத பலவீனமான நிர்வாகமும் இந்த மின் தடைக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags
Sri Lanka