பெண் வேடமிட்டு BiggBoss பிரபலம் பாலியல் தொல்லை?

 



கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸில் கலந்து கொண்டு இறுதி போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானவர் விக்ரமன். இவர், டைட்டிலை வெல்ல கூட வாய்ப்புகள் உள்ளது என கூறப்பட்டது. ஆனால் விக்ரமன் இரண்டாவது இடம் பிடித்தார். இப்போது அவர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதாவது அப்பார்ட்மெண்டில் பெண் வேடமிட்டு ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் அவரது ரசிகர்களை திடுக்கிடச் செய்துள்ளது. 

ஐய்யப்பன் தாங்கல் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை பிக் பாஸ் பிரபலம் விக்ரமனும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார். அந்த குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் பெண் வேடமிட்டு அவர் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். முதலில் அவரைப் பெண் என நினைத்தவர்கள், அதன் பின்னர்தான், பெண் வேடமிட்டு ஆண் உலா வருகிறார் எனத் தெரிந்துள்ளது. மேலும் அந்த ஆண் குடியிருப்பு பகுதியில் தனிமையில் உள்ளவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

விக்ரமன்: ஒருநாள் 23 வயது நபரிடம் அந்த பெண் வேடமிட்ட ஆண் பாலியல் தொல்லை கொடுத்த போது, பலர் சுற்றி வளைத்து பிடித்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், வீடியோவும் எடுத்துள்ளார்கள். அப்போதுதான் தெரிந்துள்ளது, பெண் வேடமிட்டு, இரவில் ஆண்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ஆண், பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் என தெரியவந்துள்ளது எனக் கூறுகிறார்கள். விக்ரமன் பிடிபட்ட பின்னர் அவரை குடியிருப்பு வாசிகளே விசாரித்து இரவோடு இரவாக வெளியே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக காவல்துறைக்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. 

வீடியோ: விக்ரமன் பிடிபட்டபோது அவரை வீடியோ எடுத்தவர்களை மிரட்டி அந்த வீடியோக்களை அழித்ததாகவும், அதற்கு பெரிய தொகை கை மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஏற்கனவே விக்ரமன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகார் வடபழனி காவல் நிலையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் பெண் வேடமிட்டு ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது என பரவி வரும் தகவல் பகீர் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிந்த விக்ரமனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 

விளக்கம்: இது தொடர்பாக விக்ரமன் தனது எக்ஸ் பக்கத்தில், இது உண்மைச் சம்பவம் இல்லை என்றும், சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து, அடிப்படை ஆதாரமின்றி, உண்மைத் தன்மையை ஆராயாமல் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கியும் உள்ளார். ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதன் ஸ்க்ரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form