ஒத்துவரவில்லை - அதிரடி முடிவெடுத்த நயன்தாரா...

 


தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார் நயன்தாரா. இடையில் சில காலம் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருந்த அவர் மீண்டும் நடிக்க வந்து தனது வெற்றி கொடியை பறக்கவிட்டார். முதலில் தமிழில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த அவர் தற்போது ஹிந்தியிலும் அறிமுகமாகியிருக்கிறார். அந்தவகையில் அவர் நடித்த முதல் ஹிந்தி படமான ஜவான் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் சில ஹிந்தி படங்களில் அவர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கேரளாவில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தில் நடித்து அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். அதேசமயம் இரண்டு காதல் தோல்விகளையும் அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பிரபுதேவாவை காதலித்தபோது ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். அதற்கு காரணம் பிரபுதேவா ஏற்கனவே திருமணமானவர் என்பதுதான். நயனை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்று பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. 

விக்னேஷ் சிவனுடன் காதல்: பிரபுதேவாவை காதலித்தபோதுதான் நயன்தாரா கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறினார். அதுமட்டுமின்றி சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். ஆனால் அந்தக் காதல் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் சில காலம் கழித்து நடிக்க வந்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு; சில வருடங்கள் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்தார்கள். இந்தக் காதலின்போதும் நயனை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். 

திருமணம்: இந்தக் காதல் கண்டிப்பாக திருமணம்வரை போகாது என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர்களது பேச்செல்லாம் பொய் என்று நிரூபிக்கும்வகையில் சில வருடங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நயனும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், ஷாலினி, மணிரத்னம், அட்லீ என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். திருமணம் ஆனதும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள். 

இப்போதும் சர்ச்சைதான்: நயன்தாரா என்றாலே சர்ச்சை என்கிற நிலை உருவாகிவிட்டது. திருமணத்துக்கு பிறகு அவரை சுற்றி சர்ச்சைகள் எதுவும் எழாமல் இருந்தாலும்; சமீபகாலமாக அவர் மீது சர்ச்சைகள் அதிகம் எழ ஆரம்பித்திருக்கின்றன. தனுஷுடன் ஏற்பட்ட மோதல், சந்திரமுகி படத்தில் நடித்தபோது ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தெரியாது என அவர் சொன்னது, பத்திரிகையாளர்களை குரங்குகள் என்று சொன்னது, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி என வரிசையாக அவர் வரிசையாக விமர்சனங்களை சந்தித்துவருகிறார். சமீபத்தில்கூட தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.அ தனை வைத்தும் அவரை ரசிகர்களில் ஒருதரப்பினர் கடுமையாக ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

நடிக்க வேண்டிய படம்: எத்தனை ட்ரோல்கள், விமர்சனங்களை சந்தித்தாலும் நயன் தொடர்ந்து படங்களில் கமிட்டாகித்தான் வருகிறார். அந்தவகையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்தில்தான் அந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் அவர் தவறவிட்ட படம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா திரைப்படத்தில் நயன்தாராதான் ஹீரோயினாக நடிக்க வேண்டியதாம். ஆனால் ஷூட்டிங் செல்வதற்கு சில நாட்கள் முன்பு இயக்குநருக்கும், நயனுக்கும் சில விஷயங்களில் ஒத்துவராததால் அந்தப் படத்தில் நயனுக்கு பதிலாக தமன்னா நடித்தாராம். இந்தத் தகவலை லிங்குசாமி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form