நயன்தாராவை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!

 

நயன்தாரா நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான் திரைப்படமும், தமிழில் அன்னபூரணி திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களில் ஜவான் மட்டுமே ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் மண்ணாங்கட்டி, ராக்காயி, டெஸ்ட், மூக்குத்தி அம்மன் 2 என பிஸியாக கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதற்கிடையே தன்னை யாரும் இனி லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என அவர் கூறியிருந்தார். 

ஹரி இயக்கத்தில் உருவான ஐயா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. அந்தப் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என பல ஹீரோக்களுடன் நடித்தார். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே கோலிவுட்டின் டாப் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார் அவர். இப்படிப்பட்ட சூழலில் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்த அவருக்கு அது தோல்வியில் முடிந்தது. அடுத்து பிரபுதேவாவை காதலித்தார். அதுவும் தோல்வியில்தான் முடிந்தது. தொடர்ந்து சினிமாவிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுத்தார். 

இரண்டாவது இன்னிங்ஸ்: அந்த பிரேக்கிற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர்; தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்தார். அப்படி அவர் நடித்தபோது அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை சில ரசிகர்கள் கொடுத்தார்கள். நயனும் தன்னுடைய படங்களில் தனது பெயருக்கு முன் அந்தப் பட்டத்தை போட்டுக்கொள்வதற்கு அனுமதி தந்தார். அதுமட்டுமின்றி அவர் அப்படித்தான் போட வேண்டும் என்று ஒப்பந்தமே போடுவார் என்றும் ஒருதரப்பினர் சொல்வதுண்டு. 

லேடி சூப்பர் ஸ்டாருக்கு நோ: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். அந்தப் பட்டத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனாலும் அப்படி என்னை அழைக்காதீர்கள். பெயர் சொல்லியே அழையுங்கள். அதுவே போதுமானது" என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த அறிக்கை ஒருசேர விமர்சனத்தையும், கிண்டலையும் சந்தித்தது. 

யாரும் கூப்பிடவில்லை: அவரது அறிக்கையை பார்த்த ரசிகர்களோ,'யார் இப்போது உங்களை அப்படி அழைப்பது. நீங்களும், உங்கள் கணவரும்தான் அழைத்துக்கொள்கிறீர்கள். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்' என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்தார்கள். நடிகை குஷ்பூவும், 'நயன் இப்படி சொல்லியிருப்பது நல்ல விஷயம்தான். பட்டம் வைத்து அழைக்காமல் பெயர் சொல்லி அழைத்தாலே போதுமானது. எங்கள் காலத்தில் எல்லாம் பட்டம் கொடுத்துக்கொண்டதில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான்' என்று மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரஜினிகாந்த்தின் வாழ்த்து: குஷ்பூவின் இந்தப் பேச்சை பார்த்த சிலர், தனது கணவர் இயக்கத்தில் நயன் நடிக்கவிருக்கும் சூழலில்; இப்படி ஓபனாக குஷ்பூ பேசியிருப்பது செம கெத்து என்று பாராட்டினார்கள். இப்படி இந்தப் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் சூழலில்; சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு ரஜினிகாந்த் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷை நேரில் தனது வீட்டுக்கு வரவழைத்து தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்தார். அதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form