விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி. பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது க்யூட் பர்பார்மென்சால் ரசிகர்களை ஈர்த்தார். கடந்த 3 சீசன்களில் கோமாளியாக வந்து அதிரடி கிளப்பினார். சில நேரங்களில் சிவாங்கி பாடும் பாடல்களை இதயமும் கரைந்து போகும். பலரையும் சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் சிவாங்கிக்கு இப்படி ஒரு சோகமா என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். கண்ணீருடன் அவர் அளித்த பேட்டிதான் காரணம் என கூறப்படுகிறது.
இசை கச்சேரி: குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை கலகலவென சிரிக்க வைத்து விடுவார் சிவாங்கி. இவரும் புகழும் செய்யும் சேட்டைகளை சொல்லி மாளாது. அண்ணன் தங்கை பாசத்தால் அடிக்கும் லூட்டிகளை கண்டு நடுவரே ஒதுங்கி ஓடுவிடுவார்கள். அதேபோன்று படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பாட்டுக்களையும் பாடி வருகிறார். ஆல்பம் பாடல்களில் பாடும் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். மேலும் அதிகமான இசைக்கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் மீது கிரஷ்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினை காதலிப்பது போன்றும் அவரை பார்த்து வெட்கப்படுவது போன்று பல மாடுலேசன்களில் அவரை துரத்தி வருவார். அதை பார்க்கும் அனைவருக்கும் சூப்பர் ஜோடி என்றும் புகழ்ந்து பேசியுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஹிட் ஆன ஜோடியாகவும் சிவாங்கியும் அஸ்வினும் பேசப்பட்டனர். அவர் செல்லமாக அஸ்வினே என்று அழைத்தால் போதும் அஸ்வின் வெட்கத்தில் சிரிப்பார். சிவாங்கிக்கு அஸ்வின் மீது கிரஷ் என்றும் கூறியுள்ளார்.
படவாய்ப்பு: சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருப்பார். அதில் அவரது நடிப்பிற்கு சிறப்பான வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். சிவா நடித்த காசேதான் கடவுளடா என அடுத்தடுத்த படங்களிலும் சிவாங்கி நடித்து வருகிறார். பாட்டு, டான்ஸ், காமெடி என பட்டையை கிளப்பி வரும் சிவாங்கிக்கு காதல் தோல்வி என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
காதல் தோல்வி: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெரிய ரீச் கிடைத்தாலும், தனக்கென்று தனி இடத்தை சிவாங்கி பிடித்துள்ளார். குடும்பத்துடன் அரட்டை, பாட்டு என ஜாலியாக இருக்கும் சிவாங்கி முதல் முறையாக காதல் தோல்வியால் துவண்டு போனது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், பிஸியாக இருக்கும் நீங்கள் இதற்குமுன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்களா என தொகுப்பாளர் கேள்வி கேட்டதும், சிரிப்புடன் பேசிய சிவாங்கியின் முகம் சோகமானது, கண்ணீர் விட்டு அழுக முடியாத நிலையில், ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், ஆனால் இப்போது எனக்கு break up ஆகிவிட்டது. அது மிகவும் கடினமாக இருந்தது. அந்த Heart break எனக்கு வலிமையை கொடுத்துள்ளது என சிவாங்கி தெரிவித்துள்ளார்.
யாருக்குதான் காதல் தோல்வி இல்லை. ஃப்ரீயா விடுங்க சிவாங்கி நாங்க இருக்கோம் என அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் சிவாங்கிக்கு பிரேக்அப்பா என வியப்புடனும் கேட்டுள்ளனர். ஜாலியா இருங்க என்றும் கூறி வருகின்றனர்.
Tags
Cinema