குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக திருமண வயதை 18ஆகக் குறைக்க சீன அரசு தீர்மானித்துள்ளது.
சீனாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ள நிலையில், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான சீனர்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags
World