பாலியல் வன்கொடுமை செய்பவர்களை அதே இடத்தில் தண்டிக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்


 தனது ஆட்சியில் , பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் அதே இடத்தில் வைத்தே தண்டிக்கப்படுவார்கள் என  பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ” தமிழகத்தில்   எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்களின் பாவனை  அதிகரித்து வருவதாகவும், இதற்கு தமிழக முதலமைச்சரே காரணம் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் தமிழ்நாட்டில் சட்டமும் கிடையாது சட்ட ஒழுங்கும் கிடையாது எனவும், பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form