பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
இன்று (19) காலை ரயில்வே அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார்.
Tags
Sri Lanka