கற்பிட்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

 

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குடாவ குறுக்கு வீதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி வீடொன்றின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்தார். 

விபத்தில் 20 வயதுடைய தலவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே மரணித்துள்ளார். 

சடலம் தற்போது கற்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form