வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்ற அதிஷ்டசாலி

 

இலங்கையின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்று (16) வெற்றி பெறப்பட்டுள்ளது. 

தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் அதிஷ்ட இலாபச்சீட்டின் 2210 ஆவது குலுக்கலில் சூப்பர் பரிசாக வழங்கப்பட்ட 474,599,422 ரூபா பரிசுத் தொகையே இவ்வாறு வெற்றி பெறப்பட்டுள்ளது. 

வெற்றி பெற்ற அதிஷ்ட இலாபச்சீட்டு, கொகருல்ல பகுதியில் H.A. ஜானகி ஹேமமாலா என்ற விற்பனை முகவரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர், லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகையாக 23 கோடி ரூபாவின் சூப்பர் பரிசை வென்று சாதனை படைத்ததும் தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் அதிஷ்ட இலாபச்சீட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form