ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம், தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதையும், இரவு நேர நிகழ்வுகளில் பங்கேற்பதையும், விழாக்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களில் ஈடுபடுவதையும் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையர்கள் வெளியில் செல்லும்போது லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
Tags
Sri Lanka