ஆசிய கிண்ண T20 தொடரின் 12வது போட்டியில் இந்திய அணி ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் ஃபோருக்கு தகுதி பெற்றது.
ஷேக் ஜாயித் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 188/8 ஓட்டங்களை குவித்தது.
அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான 38 ஓட்டங்கள் (15 பந்துகள்) மற்றும் மிடில் ஆர்டரின் பங்களிப்பு இந்தியாவுக்கு வலு சேர்த்தது.
இந்திய அணி சார்பில் சஞ்சு சம்சன் அதிகபட்சமாக 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஓமான் அணி, 189 என்ற இலக்கை துரத்தியபோது, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஓமான் அணி சார்பில் அமீர் கலீம் அதிகபட்சமாக 64 ஓட்டங்களையும், ஹம்மட் மிர்ஷா 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியுடன் இந்தியா குரூப் ஏ-யில் 3-0 என்ற சாதனையுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்து, இந்தியா செப்டம்பர் 21 அன்று சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.