எத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர், அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்திமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், எத்திமலை - கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண் என தெரியவந்துள்ளது.
எனினும், சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவருக்குச் சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தலைமறைவாகிய சந்தேகநபரைக் கைது செய்ய எத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Sri Lanka