நீச்சல் குளத்தில் மூழ்கி மஸ்கெலியா இளைஞன் பலி

 

கட்டான - கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். 

இறந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. 

ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பல நண்பர்களுடன் உல்லாசமாக நீராடி கொண்டிருந்த போது குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form