எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.
Tags
Sri Lanka
