அம்பலாங்கொடை, முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர் மிரந்த வருசவிதான என்பவரின் படுகொலைக்கு உதவியைமைக்காக சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்ட ‘படு மீயா’ என அழைக்கப்படும் சந்தேக நபரின் மனைவி உள்ளிட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 20 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Tags
Sri Lanka
