அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
'அத தெரண' வினவியபோது, இது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடற்கரையில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1000 பேர் பங்குபற்றலுடன் சிட்னியின் பிரபலமான பொண்டி கடற்கரையில் நேற்று நடைபெறவிருந்த யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான 'ஹனுக்கா' (Hanukkah) கொண்டாட்டமே துப்பாக்கிதாரிகளின் இலக்காக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tags
Sri Lanka
