ஜப்னா கிங்ஸ் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி 15.5 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
Tags
Sports
