6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு உடன் இடமாற்றம்

6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு உடன் இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைவாக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கேகாலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் களுத்துறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நலன்புரிப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நலன்புரிப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form