நான் திருமணத்திற்கு எதிரானவள் அல்ல!

நான் திருமணத்திற்கு எதிரானவள் அல்ல!

நடிகை நித்யா மேனன் திருமணத்திற்கு எதிரானவர் அல்ல என்றும், தன்னுடைய வாழ்க்கைத் தேர்வுகள் வித்தியாசமானவை என்றும் கூறியுள்ளார். பொருத்தமான உறவுக்காக மட்டுமே திருமணத்தை நாடுவேன் எனவும், சுதந்திரமான வாழ்க்கையை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது கூறிய கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நித்யா மேனன் கூறியதாவது,


நான் எப்போதும் தனியாகவே பயணம் செய்வேன். எப்போதுமே அப்படிதான். நான் திருமணத்திற்கு எதிரானவள் என சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல எனக்கும் திருமணம் செய்து கொள்ள ஆசைதான். எனக்கு பொருத்தமான ஒருவரை கண்டறிய விரும்புகிறேன். ஆனால் நான் திருமணத்தை நாடவில்லை. ஒரு முறையான உறவைத்தான் நாடுகிறேன். அது அப்படிப்பட்ட உறவாக இல்லை என்றால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.


வாழ்க்கையில் ஒருவர் சுதந்திரமாக இருக்க வேண்டும். அகங்காரத்தின் அடிப்படையில் ஒருவர் நடந்து கொண்டால் அந்த உறவு ஒரு போதும் சரியாக இருக்காது. நான் விரும்பும் வாழ்க்கைக்கு பொருத்தமான ஒருவரை கூட என் வாழ்வில் நான் சந்தித்ததில்லை. அது பெரிய விஷயமல்ல. வாழ்க்கையில் என் தேர்வுகள் வித்தியாசமானவை.


நிச்சயிக்கப்பட்ட திருமணங்களால் மிகவும் சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிலர் அவ்வாறு மகிழ்ச்சியாக இல்லை. சில சமயங்களில் நாமே தேர்ந்தெடுக்கும் ஒருவரை விவாகரத்து செய்ய வேண்டி இருக்கலாம். எது சரி, எது தவறு? என நம்மால் கூற முடியாது என தெரிவித்தார்.          

Post a Comment

Previous Post Next Post

Contact Form