சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கை படம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கை படம்

நாசா (NASA) விண்வெளி வீரர் அனில் மேனன் பகிர்ந்த சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் படம் தற்போது வைரலாகியுள்ளது.

இதன்மூலம் தீவின் இயற்கை அழகை விண்வெளியிலிருந்து பார்ப்பதைப் போன்ற அரிய  வாய்ப்பு இலங்கையர்களுக்குத் கிடைத்துள்ளது.

மேனனின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிரப்பட்ட இந்தப் படத்தில், இந்து சமுத்திரத்தின் ஆழ்ந்த நீல நிற நீரால் சூழப்பட்ட தீவும், நாட்டின் சில பகுதிகளுக்கு மேல் வெள்ளை மேகங்களும் பதிவாகியுள்ளன.

பாக்கு நீரிணைக்கு அப்பால் பின்னணியில் இந்தியாவின் தெற்கு முனையையும் இதில் காண முடிகிறது.

அமெரிக்க விண்வெளிப் படையின் கேர்ணலும் விமான சத்திர சிச்சை நிபுணருமான மேனன், 2026 ஜூலை மாதம் சோயுஸ் எம்எஸ்-29 (Soyuz MS-29) விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார்.

அவர் தற்போது எட்டு மாத கால விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக 'எக்ஸ்பெடிஷன் 74 மற்றும் 75' (Expeditions 74 and 75) திட்டங்களின் விமானப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இக்காலப்பகுதியில் அவர் உயிரியல் மருத்துவம் மற்றும் விண்வெளி மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதுடன், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியின் நிலப்பரப்புகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form